மத்திய அரசு வேலை: 3,712 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி!

published 10 months ago

மத்திய அரசு வேலை: 3,712 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி!

எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 3,712 பணியிடங்களுக்கான  அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.  அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 3,712 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  

பணியிடங்கள்

லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) / ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டண்ட் (JSA), டேடா எண்ட்ரி ஆபரேட்டர் (DEO), டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் 'ஏ' ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்னப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.05.2024.  தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி / எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது.
 

தகுதி

18 - 27 வயது உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  02-08-1997 முன்பு பிறந்தவர்களும் 01 -08 -2006 பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது. எஸ்சி /எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.

கல்வித்தகுதி

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் ஏ  பணியிடங்களுக்கு  12 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை கொண்ட பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். LDC/JSA and DEO/DEO ஆகிய பணியிடஙக்ளுக்கு  12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.  


சம்பளம்

லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) / ஜூனியர் செகரட்டேரியட் அசிஸ்டண்ட் (JSA) பணிக்கு ரூ.19,900 - 63,200,

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் (DEO) பணிக்கு ரூ. 25,500 - 81,100 மற்றும் Level-5 ரூ. 29,200 - 92,300

டேடா எண்ட்ரி ஆபரேட்டர் கிரேட் 'ஏ'- லெவல் 4 பணிக்கு ரூ. 25,500 - 81,100 சம்பளம்  கிடைக்கும்.


தேர்வு  

கணிணி வழியில் 2 கட்டங்களாக தேர்வு நடைபெறும். திறன் தேர்வு / டைப்பிங் டெஸ்ட் மற்றும்  சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe