கோவையில் பாஜக திமுக கூட்டணியினரிடையே மோதல்- பலர் படுகாயம்...

published 10 months ago

கோவையில் பாஜக திமுக கூட்டணியினரிடையே மோதல்- பலர் படுகாயம்...

கோவை: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் இரவு கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இரவு 10 மணியை தாண்டியும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இது தொடர்பாக அங்கு இருந்த காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினர்.

இதனிடையே அங்கிருந்த பாஜகவினர் திமுக கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்துப்போலிசார் அனைவரையும் கலைந்து போக செய்தனர். பின்னர் அண்ணாமலையின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டது.

பாஜக வினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர்  போராட்டத்தில்  ஈடுபட்டார்கள். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe