செஸ் ஒலிம்பியாட் : கோவையில் எல்.இ.டி திரைகள் வைப்பு

published 2 years ago

செஸ் ஒலிம்பியாட் : கோவையில் எல்.இ.டி திரைகள் வைப்பு

கோவை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பான விளம்பர எல்இடி திரைகள் கோவை மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியானது தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பிரதான அலுவலகம் டவுன்ஹால், அனைத்து மண்டல அலுவலகங்கள், வஉசி பூங்கா, வஉசி மைதானம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, பன் மால், டைடல் பார்க், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டிகள் நடைபெறுவது குறித்த விளம்பர எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த எல்.இ.டி திரையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வெளியிடப்பட்டுள்ள சின்னம் இடம்பெற்றுள்ளது. இந்த சின்னமானது செஸ் விளையாட்டில் வரும் குதிரை, வேட்டி அணிந்து வணக்கம் கூறி வரவேற்பதை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe