ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை!

published 2 weeks ago

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CQ78cBq2Gn00cQtG7fXjDn

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தங்கம் விலை ரூ.50,000 கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அதன் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது.


நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்தது. தங்கம் விலை மேலும் குறையலாம் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் தங்கம் பவுனுக்கு ரூ.600 அதிகரித்தது. இது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்தது.

இதனிடையே தங்கம் விலை இன்று குறிப்பிடத்தக்க வகையில் சரிவை சந்தித்துள்ளது.


தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65ம், பவுனுக்கு ரூ.520ம் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,790க்கும் ஒரு பவுன் ரூ.54,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.53ம் பவுனுக்கு ரூ.424ம் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.5,562க்கும் ஒரு பவுன் ரூ.44,496க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா மட்டும் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.89.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,500 க்கும் விற்பனையாகிறது.
 


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw