அழியாத சோகம்.. டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி 112 ஆண்டுகள் நிறைவு! வரலாறு இதோ!

published 2 weeks ago

அழியாத சோகம்.. டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி 112 ஆண்டுகள் நிறைவு! வரலாறு இதோ!

ஏப்ரல் 15ஆம் தேதி டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது. இந்த நாள் டைட்டானிக் நினைவுநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் குறிப்பிடத்தக்க கடல் பயணத்தின் வரலாற்றைப் பற்றியும், அதில் உயிர் இழந்தவர்களை நினைவுகூறும் நாளாக இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 112 ஆண்டுகள் ஆகிறது. 1912, ஏப்ரல் 15 உலகையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் நிகழ்ந்தது. தனது முதல் பயணத்தில் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கிய கப்பலில் பயணித்தவர்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டார் பேர் உயிரிழந்தனர்.


உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக் சொகுசு கப்பல் 1909 முதல் கட்டமைக்க தொடங்கப்பட்டது. இந்த கப்பலை முழுமையாக வடிவமைக்க 7,500,000 டாலர்கள் செலவழிக்கப்பட்டன. இதன் உருவாக்கத்தின்போது 2 தொழிலாளிகள் தங்களது உயிரை விட்டனர்.




ஆர்.எம்.எஸ் டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் நினைவாக டைட்டானிக் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எந்தவொரு அமைப்பாலும் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால்  ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி டைட்டானிக் பேரழிவின் நினைவு நாளாக பொதுமக்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.இந்த விபத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இன்றும் விவாத பொருளாகவே உள்ளன.


டைட்டானிக் கப்பலின் பிரம்மாண்டத்தை போல அது குறித்த ஏராளமான புத்தகங்களும், ஆவணப்படங்களும், திரைப்படங்களும் வந்தன.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw