இயக்குனர் ஷங்கர் மகளுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்

published 10 months ago

இயக்குனர் ஷங்கர் மகளுக்கு கோலாகலமாக  நடந்த திருமணம்

சென்னையில் இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

பிரபல இயக்குநர் ஷங்கருக்கு இரண்டு  மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்துள்ளார்.  சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார்.

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மணமக்களை வாழ்த்தினார். 



இந்த திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், அர்ஜுன் இயக்குனர்கள் பாரதிராஜா, மணிரத்னம் -சுஹாசினி, கே. பாக்யராஜ்,பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி - ப்ரிதா ஹரி, விஷ்ணு வர்தன் - அனுவர்தன், விக்னேஷ் சிவன் - நயன்தாரா உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe