கோவையில் 50% க்கும் குறைவாக வாக்குப்பதிவான இடத்தில் நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு...

published 2 weeks ago

கோவையில் 50% க்கும் குறைவாக வாக்குப்பதிவான இடத்தில் நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/Di5OOIMCPha6vMceSju9G7

கோவை: கோவையில் 50 சதவிதற்கும் குறைவாக வாக்குப்பதிவான மதுக்கரை வட்டம். கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோண்டி காலனியில், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மயிலாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.




 


மக்களவை பொதுத்தேர்தலில் 18வயது பூர்த்தியடைந்த அனைவரும் 100 சதவிகித வாக்குப்பதிவை செலுத்திட வலியுறுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நமது மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கினை அடைய மாவட்ட நிர்வாகம் மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், கையெழுத்து இயக்கங்கள். குறும்படங்கள், விழிப்புணர்வு பேரணிகள், ரங்கோலி கோலங்கள், ராட்சச பலூன், டி- சர்ட் தொப்பி, சுவர் ஓவியங்கள் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.




சூலூர் வட்டம், கருமத்தம்பட்டி கிராமத்தில் 2019 சட்ட மன்ற தேர்தலில் 60%க்கும் குறைவான வாக்குகள் பதிவான பகுதியில் உள்ள மக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தும் செல்ஃபி எடுப்பது மற்றும் கையெழுத்திடும் நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சியில் அமைந்துள்ள முருகாலயா மற்றும் துரைஸ் ஆகிய திரை அரங்குகளில் 2024 பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


மக்களவை பொதுத்தேர்தலில் 18வயது பூர்த்தியடைந்த அனைவரும் 100
சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ப்ரோஷன் மால் மற்றும் மீடியா டவர் ஆகிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சிகளும், ஐ லவ் கோவை சின்னம் அமைந்துள்ள இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் இராமநாதபுரம் மாநகராட்சி பள்ளி மாணவமாணவியர்கள் கலந்துகொண்ட தேர்தல் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

மேலும், ஆனைமலை வட்டம். சின்னார்பதி, நவ மலை செட்டில்மெண்ட் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களிடம் வருகின்ற மக்களவை பொதுத் தேர்தலில் 100% வாக்குப் பதிவினை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw