அன்பான வாக்காள பெருமக்களே...! இன்று மாலையுடன் 'டாட்டா' ; மக்கள் நிம்மதி!

published 10 months ago

அன்பான வாக்காள பெருமக்களே...! இன்று மாலையுடன் 'டாட்டா' ; மக்கள் நிம்மதி!

கோவை: தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

இந்தியாவில் வரும் 19ம் தேதி  முதல் ஜூன் 1ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக  நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி என பிரசாரம் அனல் பறந்து வருகின்றன. சில அரசியல் கட்சிகள், அதிக சத்தத்துடன் கூடிய ஸ்பீக்கர்களுடன் பிரசாரம் மேற்கொண்டது மக்களை எரிச்சலடையச் செய்தது.

குறிப்பாக கோவையில் மும்முனைப் போட்டி நிலவி வருவதால், முக்கிய தலைவர்கள் அடிக்கடி கோவை வந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்தும் ஸ்தம்பித்து வருகிறது.

பிரதமர், முதலமைச்சர் தொடங்கி, கமல், விந்தியா, செந்தில் என சினிமா பிரபலங்களும் கோவையில் பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்த சூழலில், தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணியோடு பிரசாரம் ஓய்வடைகிறது.

பிரச்சாரம் நிறைவடைந்த பின், அமைதி பிரசாரம், துண்டு பிரசார விநியோகம் உள்ளிட்ட எவ்வித பிரசாரத்திற்கும் அனுமதி இல்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாஹூ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்..

பிரசாரம் நிறைவடைவது பொதுமக்கள் மட்டுமல்லாது, அலைந்து திரிந்து களைப்படைந்த அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், தொண்டர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe