அட... என வாயை பிளக்க வைத்த தங்கம் விலை நிலவரம்!

published 10 months ago

அட... என வாயை பிளக்க வைத்த தங்கம் விலை நிலவரம்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தேர்தல் அறிவிப்பில் இருந்தே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

வழக்கமாக தங்கம் விலை  ஞாயிற்றுக்கிழமை நாட்களில் அதிகரிக்காத நிலையில் "கிடைத்த கேப்பில் எல்லாம் வெக்கிறியே ஆப்பு" என்ற வசனத்தை நினைவு படுத்தும் விதமாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் கூட தங்கம் விலை அதிகரித்தது.

கடந்த 13ம் தேதி பவுனுக்கு ரூ.200 குறைந்தது. கடந்த 14ம் தேதி பவுனுக்கு ரூ.600 அதிகரித்தது.  15ம் தேதி குறிப்பிடத்தக்க வகையில் சரிவை சந்தித்தது. பவுனுக்கு ரூ.520 குறைந்தது. நேற்று மீண்டும் ரூ.640 அதிகரித்தது.

இதனிடையே தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 பைசா விலை குறைந்து ஒரு கிராம் ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,870க்கும் ஒரு பவுன் ரூ.54,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5,628க்கும் ஒரு பவுன் ரூ.45,024க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கியமான தினத்தில் தங்கம் விலை எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது அடுத்த சில நாட்களில் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாவதற்கான அறிகுறி என்று கோவையை சேர்ந்த தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe