'மஞ்சும்மல் பாய்ஸ்' ஒ.டி.டி., வெளியீடு? வெளியானது முக்கிய அப்டேட்!

published 2 weeks ago

'மஞ்சும்மல் பாய்ஸ்' ஒ.டி.டி., வெளியீடு? வெளியானது முக்கிய அப்டேட்!

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி கொடைக்கானல்  குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் வெளியானது. படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழகத்திலும் வெளியானது. கேரளாவில் ரிலீசான இந்த படம் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.

மலையாள படமாக இருந்தாலும் இப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடிவிட்டனர்.  இந்தப் படத்தை இயக்குனர் சிதம்பரம் இயக்கியுள்ளார். படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  


மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் பாராட்டு தெரிவித்தனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். மேலும் நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார்.  குணா படத்தில் நடக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களையும்  பகிர்ந்துக் கொண்டார்.

 



 

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் மிக்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது.


மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை ஓடிடியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால், படம் ஓடிடியில் வெளியாகாமல் இருந்தது. ஓ.டி.டி., வெளியீடு தாமதமாகி வந்த நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது.  படம் வரும் மே 3 ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw