கோவையில் உள்ள ஸ்டாங் ரூமில் இத்தனை பாதுகாப்பு வசதிகளா!

published 1 week ago

கோவையில் உள்ள ஸ்டாங் ரூமில் இத்தனை பாதுகாப்பு வசதிகளா!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/HlkOvdLTXuH2GsGJ47fe0D

கோவை: கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ’ஸ்ட்ராங்’ ரூமில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
 

தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மாலை வரை விறு, விறுப்பாக நடந்த வாக்குப்பதிவில் தமிழ்நாடு முழுவதும் 72 சதவீத வாக்குகளும், கோவை நாடாளுமன்ற தொகுதியில் 64.42 சதவீத வாக்குகளும் பதிவாகின. இது கடந்த தேர்தலை விட 1 சதவீதம் அதிகமாகும். 


இந்நிலையில், கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு செல்லப்பட்டன. 

அங்கு அறை முழுவதும் பலகையால் அடைக்கப்பட்டு மிகுந்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று வேட்பாளர்களின் முகவர்கள், கலெக்டர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில், அதிகாரிகள் ஸ்ட்ராங் ரூமை பூட்டி சீல் வைத்தனர். 


தொடர்ந்து அறை முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் வளாகம் முழுவதும் துணை ராணுவத்தினர், காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. வேட்பாளர்களின் முகவர்கள் மட்டும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருப்பதோடு, வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw