BEEI வேலைவாய்ப்பு: பல்வேறு துறைகளில் காலிப்பணியிடம்... விண்ணப்பிக்க நாளை கடைசி!

published 9 months ago

BEEI வேலைவாய்ப்பு: பல்வேறு துறைகளில் காலிப்பணியிடம்... விண்ணப்பிக்க நாளை கடைசி!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவனம் சார்பில்  காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் (23.04.2024) ஆகும்.

BEEI  வேலைவாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவனம் (BEEI) சார்பில் Office Assistant மற்றும் Teachers பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கான முழு விவரங்கள் பற்றி பார்ப்போம்.

பணியிடம்

Nursery Teacher – 1, Primary Teacher – 18, Lecturers (PU) – 3, Post Graduate Teacher – 3, Lecturers (FGC) – 3, Co-Scholastics Teachers – 5, Assistant Administrative Officer – 1, Office Assistant – 3 ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்கள் பெங்களூருவில் பணியமர்த்தப்படுவார்கள்.

கல்வி  

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் B.Com, B.Sc, BA, Diploma, M.Sc, MA, MBA, MCA, ME / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு

நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

சம்பளம்

இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ.16,250 முதல் ரூ.34,200 வரை சம்பளமாக வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

பாரத் எலக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய முகவரி

Secretary,

BEEI,

BEL High School Building, Jalahalli PO,

Bengaluru-560013.

கூடுதல் விவரங்கள்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://www.beei.edu.in/ என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

 

மத்திய அரசில் வேலைவாய்ப்பு; 12ம் வகுப்பு தகுதி, 3712 பணியிடங்கள்! - முழு விவரம் இதோ!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe