கோடை வெயில்- நீச்சல் குளத்தில் பொழுதை போக்கும் கோவை மக்கள்...

published 1 week ago

கோடை வெயில்- நீச்சல் குளத்தில் பொழுதை போக்கும் கோவை மக்கள்...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை: கோவையில் குறைந்த கட்டணத்தில் நீச்சல் ஆர்வம் உள்ளவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை காந்தி பார்க் பகுதியில் மாநகராட்சி நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது. பராமரிப்பில் தனியார் நீச்சல் குளங்களை மிஞ்சும் அளவிற்கு தூய்மையாக உள்ள இந்த நீச்சல் குளத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.




 


25 மீட்டர் நீலம் மற்றும் 13 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீச்சல் குளத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் நீர் மாற்றப்படுகிறது.அன்றைய தினம் நீச்சல் குளத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

நீச்சல் பயிற்சி வழங்குவதற்காக இங்கு மூன்று பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு லைஃப் கார்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.இங்கு ஒரு முறை நீச்சல் போட 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இது தவிர மாதாந்திர பயிற்சிக்கு 1500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீச்சல் பயிற்சிக்கு வருகின்றனர்.




 


காலை 5.30 மணி முதல் 7.30 வரை அட்வான்ஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது.பேசிக் பயிற்சி காலை 7.30 மணி முதல் 8.30 வரையும்,பெண்களுக்கு என காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையும்,பொதுமக்களுக்கு காலை 9.30 மணி முதல் முதல் மாலை 4.30 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.முறையாக நீச்சல் பயிற்சி பெற்றவர்களை தவிர மற்றவர்களுக்கு டைவ் செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw