டும் டும் டும்: அபர்ணா தாஸ் ஹல்தி கொண்டாட்டம்.. வைரலாகும் போட்டோஸ்..!

published 1 week ago

டும் டும் டும்: அபர்ணா தாஸ் ஹல்தி கொண்டாட்டம்..  வைரலாகும் போட்டோஸ்..!

நடிகை அபர்ணா தாஸின் திருமண கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

2018 ஆம் ஆண்டு ஃபஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியான நிஜன் பிரகாஷன் படத்தின் மூலம் அறிமுகமானார் அபர்ணா தாஸ். அதன் பின் பல மலையாள படங்களில் இவர் நடித்து வருகிறார்.





நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்  அபர்ணா தாஸ். தொடர்ந்து கவினுடன் இணைந்து டாடா படத்தில் நடித்தார். இப்படம் வசூலைக் குவித்ததுடன் அபர்ணாவிற்கு நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது.  டாடா திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இவருக்கு பட வாய்ப்புகளும் பெருகியது.




இந்த இலையில்  அபர்ணா தாஸ் தற்போது திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க உள்ளார்.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த  தீபக் பரம்போல் உடன் இருக்கு திருமணம் நடைபெற உள்ளது. 





இவர்கள் இருவரும் மனோகரம் என்ற மலையாள படத்தில் நடித்தபோது காதல் உருவானது. நாளை (ஏப்ரல் 24) தீபக் – அபர்ணா திருமணம் நடைபெற இருக்கிறது.




இருவரும் திருமணத்திற்கு முன்பான ஹல்தி நிகழ்ச்சியை  கொண்டாடி இருக்கின்றனர். உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் சேர்ந்து இந்த விழா களை கட்டியுள்ளது.   





இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw