கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம்- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 9 months ago

கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம்- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவையில் இன்று தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோணியம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும் பால்குடம் எடுத்தும் கரகம் எடுத்தும் அழகு குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 

அதனை தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் கொங்கு பண்பாட்டு மையம் அமைப்பின் சார்பில் கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 50க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு எட்டு கிலோ சலங்கைகளை காலில் கட்டிக்கொண்டு கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம் ஆடினர். இது அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/vwKpnx3E-ZI?si=GG5lPnnryFmbqfA0

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe