தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட பண்ணை இயந்திரம் வடிவமைப்பு காப்புரிமை பெற்றது...

published 9 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட பண்ணை இயந்திரம் வடிவமைப்பு காப்புரிமை பெற்றது...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நெல் வயலில் உரமிடும் மற்றும் களை எடுக்கும் இயந்திர வடிவமைப்புக்கான தேசிய காப்புரிமையைப் பெற்றுள்ளது. 

 

இந்த காப்புரிமையானது காப்புரிமைகள், வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் காப்புரிமை அலுவலகம் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

உரமிடும் மற்றும் களை எடுக்கும் இயந்திரம் நெல் வயல்களில் உரமிடுதல் மற்றும் களையெடுத்தல் ஆகிய இரண்டின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வடிமைக்கப்பட்ட உரமிடும் மற்றும் களை எடுக்கும் இயந்திரம் உரகொள்கலன். 

கட்டுப்படுத்தப்பட்ட திறப்பு, உரமிடும் வட்டு மற்றும் ஆற்றல் பரிமாற்ற அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உரம் கொள்கலனில் இருந்து கட்டுப்படுத்தப்பட்ட திறப்பு வழியாக உரம் உரமிடும் வட்டின் மேல் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. உரமிடும் வட்டின் சுழற்சி மற்றும் மையவிலக்கு விசையின் காரணமாக உரமானது 3 மீ அகலத்தில் பரப்பப்படுகிறது.

இவ்வியந்திரத்தில் இரண்டு பற்சக்கர பெட்டிகள், ஒன்று களையெடுக்கும் கருவிக்கும் மற்றொன்று உரமிடும் வட்டிற்கும் ஆற்றலை கடத்த மற்றும் அவற்றை இயக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உருவாக்கப்பட்ட இயந்திரமானது ஒரே நேரத்தில் நெல் வயலில் களையெடுப்பு மற்றும் உரமிடுதல் வேலைகளை செய்வதால் பயனுள்ளதாக இருக்கும். 

சிறிய பண்ணைகளின் இயந்திரமயமாக்கலில்
தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழக
துணைவேந்தர்
முனைவர் கீதாலட்சுமி  நெல் வயலில் உரமிடும் மற்றும் களை எடுக்கும் இயந்திர வடிவமைப்புக்கான காப்புரிமை பெற்ற மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளை  முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் முனைவர்
செந்தில் மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய
முதன்மையர் முனைவர் ரவிராஜ் ஆகியோர் முன்னிலையில் காப்புரிமை சான்றிதழை
வழங்கி கௌரவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe