செதுக்கிய அழகு... சேலையில் மயக்கும் மேகா ஆகாஷ்!

published 9 months ago

செதுக்கிய அழகு... சேலையில் மயக்கும் மேகா ஆகாஷ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் சிம்ரனுக்கு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மேகா ஆகாஷ் அறிமுகமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து  தமிழில் வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்ட,  பூமராங் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதனால்  இவருக்கு  சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் சபா நாயகன்,  வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.  

இளம் வயதிலேயே ரஜினியுடன் நடித்து பிரபலமான  மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான  சில படங்கள்  மட்டுமே ஹிட் கொடுத்தது. ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். தனுசுக்கு ஜோடியாக  நடித்த 'என்னை நோக்கி பாயும் தோட்டா' பட மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ள இவர், தன் போட்டோ ஷூட் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வார். அந்த வகையில் தற்போது சேலையில் கேசுவலாக  க்யூட் போஸ்   கொடுத்துள்ளபடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் இதயங்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe