இந்தியாவில் நம்ம சென்னைக்கு மூன்றாம் இடம்!

published 9 months ago

இந்தியாவில் நம்ம சென்னைக்கு மூன்றாம் இடம்!

சென்னை: அதிக பயணிகளை கையாண்ட இந்திய நகரங்களில் சென்னை விமான நிலையம் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், அதிக பயணிகளை கையாண்ட நகரங்கள் குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதில், அதிக பயணிகளை கையாண்டதில் மும்பை விமான நிலையத்திற்கு முதலிடமும், டில்லி விமான நிலையத்திற்கு 2ம் இடமும் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் நம்ம சென்னை 3ம் இடத்தை பிடித்துள்ளது. சென்னை விமான நிலையம் நடப்பாண்டில் 2.12 கோடி பயணிகளை கையாண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 14.2 சதவீதம் அதிகம்  என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe