கோவையில் 400 பேர் ஹஜ் யாத்திரை!

published 1 week ago

கோவையில் 400 பேர் ஹஜ் யாத்திரை!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை: மத்திய, மாநில அரசுகளின் ஹஜ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் முக்கிய பயணமான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில், 5,637 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு விமானக் கட்டணம் உட்பட போக்குவரத்து செலவு, தங்கும் விடுதி கட்டணம், உணவுக்கான செலவு என ரூ.3.75 லட்சம் வரை செலவாகிறது.


இதில் அரசு சலுகை மற்றும் மானியமாக ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நாளை, (26-ம் தேதி) முதல் ஜூன் 9-ம் தேதி வரை 17 கட்டங்களாக ஹஜ் பயணிகள் விமானங்களில் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

அவர்களுடன் அனுபவமிக்க தன்னார்வலர்களும் செல்கின்றனர். அனைவருக்கும் வழிகாட்டு நெறிமுறை புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இதில், கோவை மாவட்டத்தில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 400 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். 





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw