சைனிக் பள்ளியில் வேலை.. 10ம் வகுப்பு படித்திருந்தால் கூட விண்ணப்பிக்கலாம்... ரூ.45,000 வரை சம்பளம்!

published 9 months ago

சைனிக் பள்ளியில் வேலை.. 10ம் வகுப்பு படித்திருந்தால் கூட விண்ணப்பிக்கலாம்... ரூ.45,000 வரை சம்பளம்!

திருப்பூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சைனிக் பள்ளியில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பிஎட், எம்பிபிஎஸ் படித்தவர்கள் வரை  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள்

டிஜிடி - ஆங்கிலம், லேப் அசிஸ்டென்ட் (இயற்பியல்), பேண்ட் மாஸ்டர், ஆர்ட் மாஸ்டர், மெடிக்கல் ஆபிசர் (Part Time), லோவர் டிவிஷன் கிளர்க், Quarter Master பணிக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதவிர வார்ட் பாய்ஸ் (Ward Boys) பணிக்கு 3 பணியிடங்கள் உள்ளது.

கல்வி

  • TGT - English பணி - ஆங்கிலத்தில் பட்டம் பெற்று பிஎட் படித்திருக்க வேண்டும். சிடிஇடி/டெட் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.
  • லேப் அசிஸ்டென்ட் (இயற்பியல்) -  12ம் வகுப்பை இயற்பியல் பாடத்தை ஒன்றாக படித்திருக்க வேண்டும்.  
  • பேண்ட் மாஸ்டர் - இந்த பணிக்கு பேண்ட் மாஸ்டர், பேண்ட் மேஜர், டிரம் மேஜர் கோர்ஸை முடித்திருக்க வேண்டும்.
  • ஆர்ட் மாஸ்டர்   -  Fine Art (with painting specialization) பிரிவில் மாஸ்டர் டிகிரி, அல்லது ஃபைன் ஆர்ட், ஆர்ட், டிராயிங் மற்றும் பெயிண்டிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க  வேண்டும்.
  • மெடிக்கல் ஆபிசர் (Part time)  - எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
  • லோவர் டிவிஷன் கிளர் - 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  நிமிடத்துக்கு 40 வார்த்தைகள் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
  • வார்ட் பாய்ஸ்  - 10ம் வகுப்பு முடித்து ஆங்கிலம், தமிழ், இந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
  • quarter Master - இந்த பணிக்கு பிஏ, பிகாம் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்

டிஜிடி - ஆங்கிலம் பணிக்கு மாதம் ரூ.40 ஆயிரம், லேப் அசிஸ்டென்ட் (இயற்பியல்), ஆர்ட் மாஸ்டர், லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்கு ரூ.25 ஆயிரம், வார்ட் பாய்ஸ் பணிக்கு ரூ.22 ஆயிரம், Quarter Master பணிக்கு ரூ.29,200 + டிஏ வழங்கப்படும். மெடிக்கல் ஆபிசர் (Part time) பணிக்க மாதம் ரூ.45 ஆயிரம் வரை வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

www.sainikschoolamaravahinagar.edu.in எனும் இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Principal, Sainik School, Amaravathinagar, Pin - 642 102, Udumalpet Taluk, Tiruppur District என்ற முகவரிக்கு ஏப்ரல் 30ம் தேதிக்குள் கிடைக்கும்மாறு  அனுப்ப வேண்டும்.

தேர்வு

எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்ள https://www.sainikschoolamaravathinagar.edu.in/careers.html என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe