தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்கள் அறிவிப்பு... உள்ளூரிலேயே வேலை.. விண்ணப்பிக்க லிங்க் இதோ!

published 9 months ago

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்கள் அறிவிப்பு... உள்ளூரிலேயே வேலை.. விண்ணப்பிக்க லிங்க் இதோ!

சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 2,329 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க  27.05.2024 கடைசி தேதி ஆகும்.

பணியிடங்கள்

நகல் பரிசோதகர் – 60, நகல் வாசிப்பாளர் – 11, முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 100, இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 242, கட்டளை எழுத்தர் – 1, ஒளிப்பட நகல் எடுப்பவர் – 53, ஓட்டுநர் – 27, நகல் பிரிவு உதவியாளர் – 16, அலுவலக உதவியாளர் – 638, தூய்மை பணியாளர் – 202, தோட்டப் பணியாளர் – 12, காவலர்/ இரவுக் காவலர் – 459, இரவுக் காவலர் – மசால்ஜி – 85, காவலர் – மசால்ஜி – 18, துப்புரவு பணியாளர் – மசால்ஜி – 1, வாட்டர் மேன்/ வாட்டர் வுமன் – 2, மசால்ஜி - 402 என மொத்தம் 2,329 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி

  • நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர் ஆகிய பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
  • நகல் பிரிவு உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தூய்மை பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர், இரவுக் காவலர், மசால்ஜி, துப்புரவு பணியாளர், வாட்டர் மேன்/ வாட்டர் வுமன் பணியிடங்களுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது அவசியம்.

சம்பளம்

  • நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், ஓட்டுநர் பணியிடங்கள்  – ரூ. 19,500 – 71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் பணியிடங்கள்  – ரூ. 19,000 – 69,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர் பணியிடங்கள்  – ரூ. 16,600 – 60,800 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • நகல் பிரிவு உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர், இரவுக் காவலர், மசால்ஜி, துப்புரவு பணியாளர், வாட்டர் மேன்/ வாட்டர் வுமன் பணியிடங்கள்  – ரூ. 15,700 – 58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு

எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம் ரூ 500, எஸ்.சி, எஸ்.சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள்  அறிந்து கொள்ள  https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடுங்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe