தெற்கு ரயில்வே வருவாய்- மூன்றாவது இடத்தில் கோவை ரயில் நிலையம்...

published 9 months ago

தெற்கு ரயில்வே வருவாய்- மூன்றாவது இடத்தில் கோவை ரயில் நிலையம்...

கோவை: கடந்த நிதி ஆண்டில்(2023-24) தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டிய 100 ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் 325 கோடி ரூபாய் வருவாயை ஈட்டி மூன்றாவது இடத்தை கோவை ரயில் நிலையம் பெற்றுள்ளது. மேலும் 1216 கோடி வருவாய் ஈட்டி முதலாவது இடத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் 564 கோடி வருவாய் ஈட்டி இரண்டாவது இடத்தில் எழும்பூர் ரயில் நிலையமும் உள்ளன.

கோவையை தொடர்ந்து, திருவனந்தபுரம், எர்ணாகுளம், மதுரை ஆகிய ரயில் நிலையங்கள் வருவாய் பட்டியலில் தொடர்ந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் போத்தனூர், வடகோவை ஆகிய இரண்டு ரயில் நிலையங்கள் தற்பொழுது மேம்படுத்தப்பட்டு வரும் சமயம் கோவை ரயில் நிலையத்தில் கூடுதல்  பராமரிப்பு வசதிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe