இப்போ வேண்டாம்.. தங்கம் வாங்க சாரியான நேரம் எது? துறை வல்லுநர்கள் கருத்து!

published 9 months ago

இப்போ வேண்டாம்.. தங்கம் வாங்க சாரியான நேரம் எது? துறை வல்லுநர்கள் கருத்து!

இந்தியாவில் மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி வெளியானது. இதற்கு முன்னதாக ஜனவரி மாதத்தில் இருந்தே தங்கம் விலை மெல்ல மெல்ல உயர்ந்து வந்தது.

தேர்தல் அறிவிப்பிற்கு பின் தங்கம் விலை தாறுமாறாக உயர தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை நாட்களில் அதிகரிக்காத தங்கம் விலை இந்த காலகட்டத்தில் "கிடைத்த கேப்பில் எல்லாம் வெக்கிறியே ஆப்பு" என்ற வசனத்தை நினைவு படுத்தும் விதமாக எகிறியது.

"தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தங்கத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் அதனை விற்பனை செய்து காசாக்க முயற்சி செய்வார்கள். இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது" என நாடு முழுவதும் பல்வேறு நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

அந்த அத்தனை கருத்துக்களையும், தவிடுபொடியாக்கி தங்கம் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இன்று ஒரு பவுன் ரூ.54 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

எது சரியான நேரம்?
இதனிடையே தங்கம் வாங்க சரியான நேரம் எது என்பது குறித்து கோவையைச் சேர்ந்த தங்க நகை தயாரிப்பாளர்களிடம் கேட்டோம். பெயர் வெளியிட விரும்பாத அந்த நிபுணர்கள் கூறியதாவது, "தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தங்கம் விலை குறையும் என்பது சரியான கணிப்பாகவே தோன்றியது. ஆனால், கணிப்புகள் இங்கு தோற்றுப்போனது.

இந்திய தேர்தல் காலம் தான் சரியான நேரம் எனக் காத்திருந்ததை போல தங்கம் விலை உயர்த்தப்பட்டது. தேர்தல் காலகத்தில் பெரும் பணக்காரர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் வாய்ப்பு இல்லை. பணமாகவே திரட்டுவர்.

அப்படியாக தேவையே இல்லாத போது எப்படி தங்கம் விலை எப்படி உயரும்? இது திட்டமிட்டு உயர்த்தப்பட்டதாகவே தெரிகிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகிறது. மே மாதமும், ஜூன் மாதமும் சுப முகூர்த்த தினங்கள் அதிகம் வருகின்றன. அதன் பிறகு ஜூலையில் 4 நாட்களும், ஆகஸ்ட் மாதம் 3 நாட்களும் தான் சுப முகூர்த்த தினங்கள் உள்ளன. எனவே இந்த காலகட்டத்தில் விலை குறைய வாய்ப்பு உள்ளது. இது தங்கத்தின் விலை குறையும் என்ற கணிப்பே தவிர, உலக நாடுகளின் தங்கம் தேவையை கருத்தில்  கொண்டு இதன் விலை அதிரடியாகவோ அல்லது வெகுவாகவோ குறையும் என்று கணித்துவிட முடியாது.

தங்கம் விலை குறைவதை மே மாத இறுதியில் இருந்து நம்மால் காண முடியும்" என்றார்.

இந்த விலை மாற்றம் குறித்த கருத்து நியூஸ் க்ளவுட்ஸ் தளத்துடையது அல்ல. நிபுணர்கள் எங்களுக்கு அளித்த தகவலையே பகிர்ந்துள்ளோம். பொதுமக்கள் சந்தை நிலவரங்களை கண்டறிந்து முதலீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe