அஜித் 53வது பிறந்த நாள்: மனைவி ஷாலினி சர்ப்ரைஸ் கிஃப்ட்! வைரலாகும் போட்டோ!

published 9 months ago

அஜித் 53வது பிறந்த நாள்: மனைவி ஷாலினி சர்ப்ரைஸ் கிஃப்ட்!  வைரலாகும் போட்டோ!

நடிகர் அஜித் குமார், இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பலரும் அவருக்கு  பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கொடுத்து அசத்தி உள்ளார்.

Ajith Kumar Turns 53 – Celebrates Birthday with Surprise Ducati Gift from  Wife Shalini

அமராவதி படத்தின் மூலம் சினிமாவால் அறிமுகமான அஜித்  அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடித்து  கால்பதிக்கத் தொடங்கினார். இன்று முன்னணி நடிகராக  வலம் வருகிறார்.

Inside Ajith Kumar And Wife Shalini's Dubai Holiday Diaries - A Romantic  Evening On A Yacht

கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு  அஜித்தின் நடிப்பில் கடைசியாக துணிவு படம்  வெளியானது. இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.    அஜித் கைவசம் தற்போது, விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உள்ளன. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு மே கடைசி வாரத்தில் தொடங்க உள்ளது எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித் தனது 53வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.  அஜித்தின் மனைவி ஷாலினி சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் Ducati bike பரிசு கொடுத்துள்ளார். தற்போது இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  மேலும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Shalini Ajith posted daughter Anoushka Birthday wish

அமர்க்களம் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஷாலினி நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு அஜிதா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe