+2 தேர்வு முடிவுகள் வெளியீடு; திருப்பூர் முதலிடம்.. நம்ம கோவை...?

published 1 week ago

+2 தேர்வு முடிவுகள் வெளியீடு; திருப்பூர் முதலிடம்.. நம்ம கோவை...?

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் 97.45 மாணவர் தேர்ச்சியுடன் தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை 7,60,606 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.


தேர்வு எழுதியவர்களில் 7,19196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.56% ஆகும். 
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 97.45% மாணவர் தேர்ச்சியுடன் முதலிடத்திலும், சிவகங்கை மாவட்டம் 97.42 சதவீதம் மாணவர் தேர்ச்சியுடனும், ஈரோடு மாவட்டம் 97.42 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடமும், அரியலூர் மாவட்டம் 97.25% தேர்ச்சியுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.

கோவை மாவட்டத்தில் 33,399 மாணவர்கள் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இதில், 32,387 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


அதன்படி, கோவை மாவட்டம் 96.97 சதவீதம் தேர்ச்சியுடன் நான்காம் இடம் பிடித்துள்ளது.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw