கோவை வரும் ரயில் சேவைகளில் 3 நாட்களுக்கு மாற்றம்; ஒரு ரயில் ரத்து!

published 1 week ago

கோவை வரும் ரயில் சேவைகளில் 3 நாட்களுக்கு மாற்றம்; ஒரு ரயில் ரத்து!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FeDW9xUn2U8AbIvNabKtk1

கோவை: ரயில்வே யார்டில் பணிகள் நடைபெறுவதால் கோவை வரும் ரயில்களின் சேவைகளில் மே 7, 9 & 13 தேதிகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


திருப்பூர் வஞ்சிபாளையம் ரயில்வே யார்டில் பல்வேறு பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில், கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மே 7, 9 & 13 தேதிகளில் மட்டும் பின்வரும் ரயில் சேவை மாற்றப்பட்டு ஒழுங்குபடுத்தப்படும்


·         ரயில் எண்.18190 எர்ணாகுளம் Jn - டாடாநகர் Jn (போதனூர், திருப்பூர் வழியாக) எக்ஸ்பிரஸ், 07, 09 & 13 தேதிகளில் எர்ணாகுளத்திலிருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டு, கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும். மேலும், வசதியான இடத்தில் 1 மணி நேரம் ரயில் ஒழுங்குபடுத்தப்படும்.

1.    ரயில் எண்.22504 திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், 10.05.2024 அன்று திப்ருகரில் இருந்து புறப்பட்டு 13.05.2024 அன்று கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வசதியான இடத்தில் 3 மணி நேரம் ஒழுங்குபடுத்தப்படும். மேலும், ரயில் இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும்.


இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் மத்திய ரயில்  நிறுத்தப்படாது. போத்தனூர் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நிறுத்தப்படும்.

2.    ரயில் எண்.12626 புது தில்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ், 11.05.2024 அன்று புது தில்லியில் இருந்து புறப்பட்டு 13.05.2024 அன்று கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வசதியான இடத்தில் 1 மணிநேரம் 40 நிமிடங்களுக்கு ஒழுங்குபடுத்தப்படும்.


மேலும், ரயில் இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலைல் நிற்காது.

3.    ரயில் எண்.12677 KSR பெங்களூரு - எர்ணாகுளம் Jn இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 13.05.2024 வசதியான இடத்தில் 1 மணிநேரம் ஒழுங்குபடுத்தப்படும். மேலும், ரயில் இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும்.


இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் மத்தியில் நிற்காது அதற்கு பதிலாக, போத்தனூர் ரயில் நிலையத்தில் 3 நிமிடம் நிறுத்தப்படும்.

பின்வரும் ரயில் சேவைகள் மே 10ம் தேதி ரத்து:


·         ரயில் எண். 16843 திருச்சிராப்பள்ளி ஜங்சன்- பாலக்காடு டவுன் ரயில் 10ம் தேதி திருப்பூர் ரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும்.

திருச்சிராப்பள்ளியில் இருந்து திருப்பூருக்கு மட்டுமே ரயில் இயக்கப்படும். 10.05.2024 அன்று திருப்பூரில் இருந்து பாலக்காடு நகருக்கு இயக்கப்படாது.


இவ்வாறு ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw