மகள் தந்தைக்காற்றும் நன்றி: கோவையில் சுமை வண்டி இழுக்கும் தொழிலாளியின் மகள் அசத்தல்!

published 9 months ago

மகள் தந்தைக்காற்றும் நன்றி: கோவையில் சுமை வண்டி இழுக்கும் தொழிலாளியின் மகள் அசத்தல்!

கோவை: கோவை தெலுங்குப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்  பால்பாண்டியன்- முருகேஸ்வரி தம்பதியினர். பால்பாண்டியம் சுமை வண்டி இழுக்கும் பணி செய்து வருகிறார்.  முருகேஸ்வரி லோடு வண்டி ஓட்டுனராக உள்ளார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் ஸ்ரீ ராஜலட்சுமி, ராஜவீதி பகுதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு உயிரியல்+ கணிதவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.

 

இந்நிலையில் நடைபெற்று முடிந்த பொது தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றதோடு 600 க்கு 560 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதுகுறித்து மாணவி ஸ்ரீ ராஜலட்சுமி கூறும் போது தான் படிக்க உதவிய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மேலும் மருத்துவராக வேண்டுமென்பது எனது  கனவு எனும் அதற்காக நீட் தேர்வு எழுதி உள்ளதாகவும், அதே சமயம் தங்கள் குடும்ப சூழலை கருதி மருத்துவப் படிப்புக்கு தேவையான உதவி செய்ய யாராவது முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

அதே போல் அப்பள்ளியில் Accounts பாட பிரிவில் படித்த மாணவி செளபாக்கியா 595 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் சிவில் சர்விஸ் மேற்கொள்ள இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe