சென்னையில் ஆசிரியர் வேலைவாய்ப்பு: ரூ.40,000 வரை சம்பளம்... நேர்காணல் மட்டுமே!

published 9 months ago

சென்னையில் ஆசிரியர் வேலைவாய்ப்பு: ரூ.40,000 வரை சம்பளம்... நேர்காணல் மட்டுமே!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை (Kalakshetra Foundation) சார்பாக சென்னையில் இயங்கி வரும் பள்ளியில் (Besant Arundale Senior Secondary)  ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட  உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள்

PGT (Political Science & Sociology), SGT (English), SGT (Hindi) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட  உள்ளன.

கல்வி

இந்தப் பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் BA, M.Sc, MA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளம்  வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இந்த காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் முகவரி: Principal, Besant Arundale Senior Secondary School, Thiruvanmiyur, Chnneia-600041.

நேர்காணல் நடைபெறும் தேதி

PGT (Political Science & Sociology) -  14.05.2024 நேர்காணல் நடைபெறும்

SGT (English) - 15.05.2024  நேர்காணல் நடைபெறும்

SGT (Hindi)  - 16.05.2024 நேர்காணல் நடைபெறும்

தேர்வு  முறை

Demo Class, நேர்முக தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.   
 

மேலும் விவரங்கள்

இந்த பணிகள் குறித்த சந்தேகங்கள் மற்றும் மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://kalkbuckmedi21.s3.ap-south-1.amazonaws.com/2024/05/Advt-BASS-Walk-in-interview-070524.pdf அதிகாரபூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.

அதிகாரபூர்வ இணையதளம்: https://www.kalakshetra.in/

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe