கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு படத்திற்கான சேர்க்கை விண்ணப்பம் வெளியிடு…

published 1 week ago

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு படத்திற்கான சேர்க்கை விண்ணப்பம் வெளியிடு…

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/HlkOvdLTXuH2GsGJ47fe0D

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை 2024-25 ம் கல்வியாண்டில் சேர்க்கைக்காக எம்.எஸ்சி செயற்கை நுண்ணறிவு என்ற புதிய பாடத்தைத் தொடங்கியுள்ளது.M.Sc செயற்கை நுண்ணறிவு (2 ஆண்டுகள்) படிப்பில் சேர தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

தகுதி,கட்டணம்,உதவித்தொகை, விடுதி வசதிகள் போன்ற விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் www.b-u.ac.in- யில் உள்ளது.பாரதியார் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையில் வழங்கப்படும் எம்எஸ்சி செயற்கை நுண்ணறிவுப் படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 06.05.2024 முதல் 06.06.2024 வரை பல்கலைக்கழக இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம்.


விண்ணப்பதாரர் 400 ரூபாயை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் என்றும் SC/ST விண்ணப்பதாரர்கள் 200 ரூபாய் செலுத்தி பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தபால்/கூரியர் மூலம் 06.06.2024 அன்று அல்லது அதற்கு முன் HOD Department of Computer Science,Bharathiar University, Coimbatore என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் பல்கலைக்கழகம் சார்பாக அறிவிப்பு வெளியிட்டனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw