கோவை நகைக்கடைகளில் குவியும் மக்கள்...!

published 9 months ago

கோவை நகைக்கடைகளில் குவியும் மக்கள்...!

கோவை: அட்சய திருதியை நாளில் நகை, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றை வாங்கி வீட்டில் வைத்தால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். எனவே இந்நாளில் பெரும்பாலான மக்கள் தங்கம் வெள்ளி வைர நகைகளை வாங்குவர். 

 

அதன்படி இந்த வருட அட்சய திருதியை நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெரும்பாலான மக்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டத்திலும் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. காலை முதலே மக்கள் நகைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்நாளை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் சிறப்பு சலுகைகள் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்படுகிறது. அதே சமயம் பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் அனைவரும் குழந்தைகள் உடன் வந்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நகைகளை வாங்கி செல்கின்றனர்.

மேலும் அட்சய திருதியை நாளை முன்னிட்டு அனைத்து கடைகளிலும் புதுபுது டிசைன்களில் நகைகள் புதுவரவாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe