வருமானம் ஈட்ட வாய்ப்பு : வேளாண் பல்கலையில் காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி..!

published 2 years ago

வருமானம் ஈட்ட வாய்ப்பு : வேளாண் பல்கலையில் காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்.

உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் (Dehydrated vegetables and fruits)
பலவகை பழ ஜாம் (Mixed fruit jam)
பழரசம் (Squash)
தயார் நிலை பானம் (Ready - to - serve beverage)
ஊறுகாய் (Pickles)
தக்காளி கெட்சப் (Tomato ketchup)
ஊறுகனி (Candy)
பழப்பார் (Fruit bar)

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,770 செலுத்தி பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிற்சி கட்டணத்தை பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், கோயமுத்துார் -3 என்ற பெயரில் வங்கி வரைவோலையாக எடுத்து பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - 0422 6611268

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe