கோவையில் 5000க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை...

published 9 months ago

கோவையில் 5000க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை...

கோவை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர்  அறிவுறுத்தலின் படி, கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கோவை மாவட்ட காவல் துறை மற்றும் கோவை மாவட்ட உணவு உணவு பாதுகாப்பு துறையினருடன் இணைந்து 23 சிறப்பு குழுக்கள் தமிழக அரசால் அமைக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதிகளில் சோதன மேற்கொண்டனர்.

 

பீளமேடு, கணபதி, போத்தனூர், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, சிங்காநல்லூர்', காளப்பட்டி, அவிநாசி ரோடு, காந்திபுரம், வடவள்ளி,ரேஸ் கோர்ஸ், ராமநாதபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி சூலூர் கிணத்துக்கடவு மதுக்கரை தொண்டாமுத்தூர், அன்னூர், எஸ்.எஸ்குளம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, ஆனைமலை, வால்பாறை போன்ற பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு சிறப்பு கூட்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி 5,568 கடைகளில் திடீர் கூட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது 692 கடைகளில் சுமார் 3098.38 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளான பான்மசாலா மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  


பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்காவின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 30,63,804 ஆகும். மேலும் களஆய்வின் முடிவில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருள் பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்த முதல் முறை குற்றம்புரிந்த 683 கடைகளுக்கு கடைகளுக்கு அபராதமாக தலா ரூபாய்25,000 வீதம் மற்றும் அவர்களது கடையில் வணிகம் மேற்கொள்ள 15 நாட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது மொத்தம் ரூபாய். 17,07,5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் முறை குற்றம்புரிந்த 8 கடைகளுக்கு கடைகளுக்கு அபராதமாக ரூபாய்.50,000/- வீதம் மொத்தம் ரூபாய்.4,00,0000/- அபராதம் விதிக்கப்பட்டு மற்றும் அவர்களது கடையில் வணிகம் மேற்கொள்ள 30
நாட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வணிகம் மேற்கொள்வது கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe