அமெரிக்கா பறந்த நடிகர் விஜய்... GOAT படப்பிடிப்பு இறுதிக்கட்டம்!

published 9 months ago

அமெரிக்கா பறந்த நடிகர் விஜய்... GOAT படப்பிடிப்பு  இறுதிக்கட்டம்!

'லியோ' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 68வது படம். 
படத்தை வெங்கட் பிரபு  இயக்குகிறார். வெங்கட் பிரபு - விஜய் காம்போ முதல் முறையாக 
இணைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

GOAT இறுதிக்கட்ட படப்பிடிப்பு:  அமெரிக்காவில் விஜய்- வீடியோ வைரல்

படத்தில், நடிகர் பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, ஜெயராம், லைலா, அஜ்மல், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.  யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  

Thalapathy Vijay's GOAT OTT Rights Bought By Netflix | Report

'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள  இந்த படம் குறித்த அப்டேட் அவ்வபோது வெளியான வண்ணம் உள்ளது. படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5 படம் தியேட்டர்களில் வெளியாகும்   என படக்குழு அறிவித்துள்ளது.

This Actress to Play Thalapathy Vijay's Daughter in THE G.O.A.T

தற்போது  படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடந்து வருவதாக தெரிகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது.  

Vijay-Venkat Prabhu movie 'The GOAT' release date announced, vijay, the goat,  movies, release date

இந்நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முன்னிட்டு  நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe