சென்னை, கோவை, மதுரை... அடுத்த 7 நாள் எப்படி? வானிலை முன்னறிவிப்பு!

published 9 months ago

சென்னை, கோவை, மதுரை... அடுத்த 7 நாள் எப்படி? வானிலை  முன்னறிவிப்பு!

கோவை: சென்னை, கோவை, மதுரையில் அடுத்த 7 நாட்கள் வானிலை எப்படி இருக்கும் என்ற வானிலை  முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கோடையில் வெப்பம் தமிழகத்தை வாட்டியெடுத்த நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அடுத்த 7 நாட்கள் வானிலை எப்படி இருக்கும், மழை அளவு எப்படி இருக்கும் என்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துக் கூறியுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில், வரும் 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதா தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 16,17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 35 டிகிரி வரை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில், 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், 16,17 தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெப்ப நிலை குறைந்தது 29 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில், 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், 13,14 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. 16,17 தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெப்ப நிலை குறைந்தது 25 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe