கோவையில் தூய்மைப்பணிக்கான மக்கள் இயக்கம் துவக்கம்..!

published 2 years ago

கோவையில் தூய்மைப்பணிக்கான மக்கள் இயக்கம் துவக்கம்..!

கோவை: கோவை மாநகராட்சி சார்பாக, தூய்மை பணிக்கான மக்கள் இயக்கத்தின் விழிப்புணர்வு மற்றும் கழிவுகளை அகற்றும் பணியை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை அண்மையில் தொடங்கி வைத்தார்.

இதில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் எனது குப்பை - எனது பொறுப்பு என்ற திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் குப்பைகளைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில்  கோவை மாநகராட்சி சார்பில் கணபதி,புலியகுளம்,குறிச்சி குளம் உள்ளிட்ட  பகுதிகளில் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு மற்றும் கழிவுகளை அகற்றும் பணியினை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமர் துவக்கி வைத்தார்.

இதில் தனியார் கல்லூரி மாணவர்கள் குறிச்சி குளத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தூய்மை பணாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதில் மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், துணை ஆணையர் சர்மிளா, சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன்,தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை,வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல்,தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி,மாமன்ற உறுப்பினர்கள் சரளா,குணசேகரன்,கார்த்திகேயன்,அஸ்லாம் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்  பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.இதில் உதவி ஆணையர், உதவிப் பொறியாளர்  மகேஷ்,தூய்மை பணியாளர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe