கருப்பு உடையில் கலக்கும் ஷிவானி நாராயணன்... வேற லெவல் போட்டோஷூட்!

published 9 months ago

கருப்பு உடையில்  கலக்கும் ஷிவானி நாராயணன்... வேற லெவல் போட்டோஷூட்!

நடிகை ஷிவானி நாராயணன் கவர்ச்சிகரமான போட்டோஷூட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் ஷிவானி. இதனை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பின்னர் இவருக்கு வெள்ளைத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விக்ரம், வீட்ல விசேஷம், டிஎஸ்பி,  நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

சமூக வலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவார் ஷிவானி. கவர்ச்சியான  உடையில் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  

அந்தவகையில் தற்போது கருப்பு நிற உடையில் கிளாமர் போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த லேட்டஸ்ட் பதிவு  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதோடு லைக்குகளையும் குவித்து வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe