கோவையில் நேற்று எங்கு எவ்வளவு மழை பெய்தது?

published 9 months ago

கோவையில் நேற்று எங்கு எவ்வளவு மழை பெய்தது?

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவி விவரத்தை பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து கோவை மக்களை குளிர்வித்து வருகிறது. இதனிடையே மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு விவரத்தை பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவையின் பல்வேறு சுற்றுவட்டாரங்களில் நேற்று பெய்த மழை அளவு பின்வருமாறு:

விமான நிலையம் 41.30 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 27 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 21.4 மி.மீ, மேட்டுப்பாளையம் 30.5 மி.மீ, 

பில்லூர் அணை 170 மி.மீ, அன்னூர் 4.2 மி.மீ, கோவை தெற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 4 மி.மீ, சூலூர் 33 மி.மீ, 

வாரப்பட்டி 23 மி.மீ, 

தொண்டாமுத்தூர் 50 மி.மீ,  சிறுவாணி அடிவாரம் 24 மி.மீ,  மதுக்கரை தாலுகா 8 மி.மீ,  போத்தனூர் ரயில் நிலையம் 10 மி.மீ,

பொள்ளாச்சி 6 மி.மீ, மக்கினாம்பட்டி 7 மி.மீ,  குணத்துக்கடவு தாலுகா 31 மி.மீ,  ஆனைமலை தாலுகா 1.2 மி.மீ,  ஆழியாறு 51 மி.மீ, சின்கோனா 34 மி.மீ, 

சின்னக்கல்லார் 25 மி.மீ, சோலையார் 4 மி.மீ, என கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 605.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் 26.33 மி.மீ., சராசரி அளவாக மழை பதிவாகியுள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe