'Goat' படத்தின் VFX பணிகள் நிறைவு... வெங்கட் பிரபு தந்த தரமான அப்டேட்!

published 9 months ago

'Goat' படத்தின் VFX பணிகள் நிறைவு... வெங்கட் பிரபு தந்த தரமான அப்டேட்!

நடிகர் விஜய் நடிக்கும் 'கோட்' திரைப்படத்தின் அசத்தல் அப்டேட் வெளியாகியுள்ளது.

'லியோ' படத்தை தொடர்ந்து விஜய் 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 68வது படம். படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு  இயக்குகிறார். முதல் முறையாக வெங்கட் பிரபு - விஜய் காம்போ இப்படத்தில் இணைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்  அதிகரித்துள்ளது.

article_image1

'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள  இந்த படம் குறித்த அப்டேட் அவ்வபோது வெளியான வண்ணம் உள்ளது. நடிகர் பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, ஜெயராம், லைலா, அஜ்மல், லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா  படத்திற்கு இசையமைக்கிறார்.

article_image3

படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில்  விரைவில் முடிவடையும் என தெரிகிறது.
படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  படத்தில் தன்னுடைய பாதி டப்பிங்கை நடிகர் விஜய் பேசி முடித்துள்ளனர்  தகவல்கள்  வெளியாகியுள்ளது.

article_image4

எடிட்டிங், டப்பிங் பணிகள் ஒரே சமயத்தில்  நடைபெற்று வருகிறது. கோட் படத்தின் வி.எப்.எக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடக்கிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு, தனது எக்ஸ் தள பக்கத்தில், வெற்றிகரமாக விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்துவிட்டன என்றும் அவுட் புட்டை காண ஆவலோடு இருப்பதாகவும்  பதிவிட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe