ஆசிரியர் வேலைவாய்ப்பு: 21 பணியிடங்கள்... ரூ.30,000 வரை சம்பளம்!

published 8 months ago

ஆசிரியர் வேலைவாய்ப்பு: 21 பணியிடங்கள்... ரூ.30,000 வரை சம்பளம்!

சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும்  ருக்மிணி தேவி கல்லூரியில்  ஆசிரியர் பணிக்கான   அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்

தமிழ் – 1, ஆங்கிலம் – 1, தெலுங்கு – 1, சமஸ்க்ரிதம் – 1, பாரதநாட்ய ஆசிரியர் – 5, கர்நாடக இசை குரல் ஆசிரியர் – 6, கர்நாடக இசை வீணை ஆசிரியர் – 2, இசை மிருதங்கம் ஆசிரியர் ( கர்நாடக ) – 3, கர்நாடக இசை வயலின் ஆசிரியர் – 1 என மொத்த 21 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி

ஒவ்வொரு பணியிடங்களுக்கான கல்வி தகுதி அறிவிப்பில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

மொழி ஆசிரியர் – ரூ.15,000 – ரூ.30,000 வரை,  பாரதநாட்ய & கர்நாடக இசை ஆசிரியர் – ரூ.20,000 – ரூ.36,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பத்தை  பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து தபால் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2024 ஆகும்.

முகவரி: இயக்குனர், கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, திருவான்மியூர், சென்னை – 600 041.

தேர்வு

இந்த பணியிடங்களுக்கு  நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்கள்  

இந்த பணியிடங்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவலுக்கு https://kalkbuckmedi21.s3.ap-south-1.amazonaws.com/2024/05/Advertisment-for-filling-up-faculty-positions-on-contract-basis-for-the-AY-2024-2025.pdf என்ற அதிகார பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe