நொய்யல் ஆறு தடுப்பணையில் மீண்டும் ரசாயன கழிவுகள்...

published 8 months ago

நொய்யல் ஆறு தடுப்பணையில் மீண்டும் ரசாயன கழிவுகள்...

கோவை: கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிபாக மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோவை நொய்யல் ஆற்றில் தற்பொழுது வர துவங்கியது நீர்வரத்து.

இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யல் ஆற்றில் இருந்து  வெளியேரும் தண்ணீர். கோவை ஆத்துப்பாலம், காளவாய் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு வருகிறது. இந்த தடுப்பணை ஒருகாலத்தில் விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்தது என்பது குறிப்புடத்தக்கது. 

தற்பொழுது நொய்யல் ஆற்றில் நீர்வழி தடங்களை தூற்வாராததும், நீர் வழித் தட வழி தடங்களின் அருகில் செயல்பட்டுவரும் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் அருகில் இருக்கும் வீடுகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கல் வழியாக நொய்யல் ஆற்றில் கலக்கும் அசுத்த நீராலும் தற்பொழுது காளவாய் தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் நுறையுடன் வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe