கோவை மக்களே இப்போ சித்திரைச்சாவடிக்கு போனால் சரியான என்ஜாய்மெண்ட் தான்! - புகைப்படங்கள்

published 8 months ago

கோவை மக்களே இப்போ சித்திரைச்சாவடிக்கு போனால் சரியான என்ஜாய்மெண்ட் தான்! - புகைப்படங்கள்

கோவை: கோடையால் வறண்டு கிடந்த சித்திரைச்சாவடி தடுப்பணையில் தற்போது தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி பொங்க குளித்து விளையாடி வருகின்றனர்.

கோவையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய வெயில் மே இரண்டாம் வாரம் வரை கொளுத்தியது. கோவையில் உள்ள பல குளங்கள் வறண்டன.

குளுகுளு சீதோஷன நிலையில் வாழ்ந்து பழகிய கோவை மக்கள் இந்தாண்டு நிலவிய கடும் வெப்பத்தால் அவதியடைந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களாக கோவையில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப்பொழிவு அதிகம் இருந்ததால் தற்போது நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பூளுவபட்டியை அடுத்த சித்திரைச்சாவடிக்கு தண்ணீர் வந்தது.

தடுப்பணை பல நாட்களாக வறட்சியாக காணப்பட்ட நிலையில், தண்ணீர் வந்ததால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குழந்தைகளோடு, பெரியவர்களும் அணைக்கட்டில் குளித்து மகிழ்ந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe