சரவணம்பட்டியில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்- காவல் ஆணையாளர் கூறுவது என்ன..?

published 8 months ago

சரவணம்பட்டியில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்- காவல் ஆணையாளர் கூறுவது என்ன..?

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அறிவுரைகளின் படி தனியார் மருத்துவமனை மற்றும் Young Indians உடன் கோவை மாநகர காவல் துறை இணைந்து நடத்தும் காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் பாத பராமரிப்பு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோவை பி.ஆர்.எஸ் மைதானம் வளாகத்தில் நடைபெற்றது.

 

கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,துணை ஆணையர் சரவணன்,ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், 

கோவை சின்னவேடம்பட்டி ராணுவ குடியிருப்பில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் உயிர் இருந்து உயிரிழந்த குறித்து கேள்விக்கு,

முதலில் சிஆர்பிசி 174 சந்தேகத்திற்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது மேலும் தொடர் விசாரணையில் 304-A வழக்கு பதிவு செய்து விபத்து என்று வழக்கு மாற்றப்பட்டது. விபத்து ஏற்படுத்தியவர் மீதும் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் இது குறித்து தற்பொழுது புலன் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி,மின்வாரியத்தில் உரிய அனுமதியில்லாமல் பூங்கா அடியில் மின்சாரம் இணைப்பு கொண்டு வந்துள்ளதாகவும் அது சம்பந்தப்பட்ட நபர் மீதும் ஒப்பந்ததாரர் மீதும் புலன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தற்போது வரை விபத்து சம்பந்தமாக யார் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை புலன் விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

கோவையில் மாநகர் பகுதியில் U-Turn-னால் போக்குவரத்து நெரிசல் சிறிய அளவில் இருந்தாலும் பெரிய அளவில் மக்கள் கருதுகிறார்கள்.U-Turnனால் முதலில் இருந்ததை விட தற்பொழுது போக்குவரத்து நேரம் பொதுமக்களுக்கு குறைவாக உள்ளது.ஒரு சில தவறுகளை விரைவில் சரி செய்வதாக கூறினார்.

கோடை காலத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு உரிய உடை வழங்கப்பட்டதாகவும் முக கவசங்களை ஒரு சில காவலர்கள் சரிவர அணியாமல் இருக்கின்றனர்.மேலும் காவலர்களுக்கு உடல் உறுதியாக, மன ரீதியாக அழுத்தங்களை போக்குவதற்காக இதுபோல மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருவதாக கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe