உலக பட்டினி தினம்... கோவையில் விறுவிறு பணியில் விஜய் ரசிகர்கள்...

published 8 months ago

உலக பட்டினி தினம்... கோவையில் விறுவிறு பணியில் விஜய் ரசிகர்கள்...

கோவை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு,ஒரு வேளை உணவு சேவை என்ற திட்டத்தில் தமிழக வெற்றி கழகம்,கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி  சார்பாக  உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.

 

தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவக்கிய நடிகர் விஜய்,தனது அரசியல் பயணத்தை தீவிரபடுத்தி வருகிறார்..பல்வேறு நலத்திட்டங்களை வழங்க அறிவுறுத்தி வரும் அவர்,உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும்  ஒருவேளை மதிய உணவு வழங்க வேண்டி தனது ரசிகர்களுக்கு கட்டளை இட்டிருந்தார்.

அதன் படி,கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள உழவர் சந்தை பகுதியில்,தமிழக வெற்றி கழகம் ,கோவை தெற்கு  மாவட்ட இளைஞரணியினர்,உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்கி,இளைஞரணி தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் இணைந்து வழங்கிய அன்னதானத்தை தூய்மை பணியாளர்கள், விவசாயிகள்,காய்கறி வியாபாரிகள்,ஓட்டுனர்கள்,என  ஏராளமானோர் பெற்று சென்றனர்..
இதே போல,கோவை பொள்ளாச்சி,வால்பாறை,கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட போத்தனூர்,வெள்ளலூர்,சூலூர்,மதுக்கரை மார்க்கெட்,பொள்ளாச்சி,கிணத்துகடவு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தளபதி வெற்றி கழகத்தினரும் உணவு வழங்கியது குறிப்பிடதக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe