லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை விதித்தது கோவை நீதிமன்றம்!

published 8 months ago

லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை விதித்தது கோவை நீதிமன்றம்!

கோவை: கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது வீட்டின் அருகே மின்கம்பம் ஒன்று இடையூறாக இருந்தது. இதனை அகற்றக்கோரி கடந்த 2012-ம் ஆண்டு சரவணம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய இளநிலை பொறியாளர் (வினியோகம்) டி.எம்.ரவீந்திரன் (வயது 60) என்பவரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இதற்கு அவர் கடந்த 5-7-2012-ம் ஆண்டு தேவராஜிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு மறைந்து இருந்த கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எம்.ரவீந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று  தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் வழக்கை விசாரித்த  நீதிபதி எஸ்.மோகனா ரம்யா   டி.எம்.ரவீந்திரனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் சிறப்பு  டி.எஸ்.சிவகுமார் வாதாாடினார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் போலீஸ் சூப்பிரண்டு கே.சுந்தர்ராஜ், இன்ஸ்பெக்டர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாகவும், இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி ஒப்படைப்பு அதிகாரியாகவும் செயல்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe