மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

published 8 months ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பிரபல மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி

இந்த பணிக்கு இளங்கலை அல்லது முதுகலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.  2019, 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

அனுபவம்

ஒன்று முதல் 3 ஆண்டு வரை கோடிங் அனுபவம்  பெற்றிக்க வேண்டும். லினக்ஸ் ஆபரேஷன் சிஸ்டம்ஸ், Kubernetes Cluster Orchestration-ல் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்

அனுபவம், திறமை அடிப்படையில் பணிக்கு தேர்வாகும் நபர்களின் சம்பளம் மாறுபடும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பம் உள்ளவர்கள் Microsoft இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருக்கும்  லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.  

பணியமர்த்தப்படும் இடங்கள்

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டாவில் பணியமர்த்தப்படுவார்கள்.  மேலும்  வீட்டில் இருந்து  வேலை செய்யும்  வாய்ப்பும் தரப்படுகிறது.   

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe