கோவையில் 5,000 மரக்கன்றுகள் நடும் திட்டம்; தொடங்கி வைத்தார் ஆட்சியர்!

published 8 months ago

கோவையில் 5,000 மரக்கன்றுகள் நடும் திட்டம்; தொடங்கி வைத்தார் ஆட்சியர்!

கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 5,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்.

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுக்கரை பிள்ளையார்புரம் வனத்துறைக்கு சொந்தமான 27 ஏக்கர் வனப்பகுதியில் கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் தனியார் நிறுவன நிதி பங்களிப்புடன் சுமார் 5,000 நாட்டு மரக்கன்றுகள் நடுவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நடவு செய்து நிகழ்வை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வனத்துறையின், கல்லூரி மாணவர்கள், இந்திய ராணுவம் மற்றும் தன்னார்வலர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe