மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

published 2 years ago

மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு தே.மு.தி.க கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோவை மாநகர மாவட்டச் செயலாளர் சிங்கை சந்துரு,  தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ தினகரன், வடக்கு மாவட்டச் செயலாளர் சிவராமன் ஆகியோர் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு உயர்த்தி உள்ள சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்படவுள்ள மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ள உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைத்து விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். 

இதில் பட்டதாரி ஆசிரியர் அணி துணைச் செயலாளர் செந்தில்குமார், மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் விஜய் வெங்கடேஷ், மாநில தொழிற்சங்க பேரவை துணை சட்ட ஆலோசகர் வக்கீல் முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காந்திபுரம் பகுதி பொறுப்பாளர் செந்தில் குமார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தே.மு.தி.க கட்சிணர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe