'குரங்கு பெடல்' ஓ.டி.டி ரிலீஸ் எப்போது தெரியுமா?

published 8 months ago

'குரங்கு பெடல்' ஓ.டி.டி ரிலீஸ் எப்போது தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன், ' எஸ்.கே ப்ரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனத்தின் கீழ் பல வெற்றி படங்களை தயாரித்து  வருகிறார். அதன்படி, கனா, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.

விரைவில் ஓ.டி.டி. ரிலீஸ் - `குரங்கு பெடல் அடிக்க தயாரா?

தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தையும்  சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார்.  இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைதொடர்ந்து 'குரங்கு பெடல்' படத்தை எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

திரை விமர்சனம்: குரங்கு பெடல் | kurangu pedal movie review - hindutamil.in

ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள  இப்படத்தில்  காளி வெங்கட் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.   கிப்ரான் இசையமைத்துள்ளார்.

Kurangu Pedal Movie Review | குரங்கு பெடல்

சைக்கிள் ஓட்ட தெரியாத அப்பாவுக்கும், எப்படியாவது சைக்கிள் ஓட்டியே ஆகவேண்டும் என துடிக்கும் மகனுக்கும் இடையே ஏற்படும்  போராட்டத்தை நகைச்சுவையான கதைக்களத்துடன் உருவாக்கியுள்ளனர் . 
இப்படம் கடந்த மே மாதம் 3ம் தேதி திரையரங்குகளில்  வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இப்படம் தற்பொழுது ஆஹா ஓ.டி.டி.,யில் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe