50 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுச்சூழல் குற்றங்கள் நடைபெறும்- கோவை மாநகர காவல் ஆணையாளர் விடுத்த எச்சரிக்கை...

published 8 months ago

50 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுச்சூழல் குற்றங்கள் நடைபெறும்- கோவை மாநகர காவல் ஆணையாளர் விடுத்த எச்சரிக்கை...

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறையும்,ஊர்காவல் படையும் இணைந்து போக்குவரத்து சிக்னல்களில கோவை காந்திபுரம் சிக்னலில் 500 மரக்கன்றுகளை கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் வடக்கு துணை ஆணையர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்கள்.மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மரக்கன்றுகள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றிய கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,

தற்பொழுது குற்றங்களில் 2 வகை உள்ளது ஒன்று கொள்ளை மற்றொன்று இணைய வழி குற்றம்  என்று பொதுமக்களிடம் கூறினார். அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுச்சூழல் குற்றங்கள் ஏற்படும் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுவித்தார்.

மரங்கள் வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றும் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால் காவல்துறையினர் பாதுகாப்போடு ஆக்சிஜன் கொண்டு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களும் மரங்களை விழிப்புணர்வோடு வளர்த்தால் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படும் என்று கூறினார்.மரங்கள் வளர்ப்பு வளர்ப்பது மூலம் அதிக அளவில் மழை பெய்யும் என்றும் சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆக்சிஜன் அதிகளவில் கிடைத்து பொதுமக்கள் சுத்தமான காற்றை சுவாசித்து வாழ முடியும் என்று கூறினார்.

பொதுமக்கள் சுற்றுச்சூழல் குற்றங்கள் ஏற்படாதவாறு மரங்களை வளர்த்து அதனை பாதுகாத்து அனைவருக்கும் நன்மை ஏற்படுத்தும் வகையில் மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe