விஜய் சேதுபதியின் 'மகாராஜா' ரிலீஸ் தேதி குறிச்சாச்சு!

published 8 months ago

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' ரிலீஸ் தேதி குறிச்சாச்சு!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மகாராஜா படம் எப்போது ரிலீஸ் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின் 50 வது படமாக ' மகாராஜா'  திரைப்படம் உருவாகி உள்ளது. படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படம் ரிலீஸ் எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்!

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இந்த படத்தை  இயக்கியுள்ளார்.  சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

படம் அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக  விஜய் சேதுபதியின்  ரசிகர்கள் மத்தியில்  படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஜா படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரில்  இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதி நடிப்பின் தோற்றம் இருந்ததால் படம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும்  தூண்டியுள்ளது.

இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என படக்குழு அதிகாரப் பூர்வகமாக  அறிவித்துள்ளது. இது தொடர்பாக விஜய் சேதுபதி தன் எக்ஸ் தளத்தில் போஸ்டர் ஒன்றும் வெளியிட்டு  உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe